தமிழகத்தில் டிச. 19 முதல் வரும் 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் வரும் 22-ம் தேதி வரை சில இடங்களில் வெப்பநிலை வழக்கத்தைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும். இதனால் குளிர் அதிகரிக்கும். கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. என வானிலை ஆய்வு மையம் தகவல்