திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக காட்டு மாடுகள் நடமாடும் நிலை அதிகரித்து வருகிறது. அவ்வப்போது காட்டுமாடுகள் தாக்குவது தொடர்கிறது. இந்நிலையில் தற்போது கொடைக்கானல் லேக் பகுதியில் சாலையில் காட்டு மாடுகள் ஒய்யாரமாக ஊர்வலம் செல்லும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.