சாத்தான்குளம்: தட்டார் மடம் அருகே வேப்பங்காடு சாலையில் காரை வைத்து இடித்து ஓட ஓட விரட்டி வெட்டி வாலிபர் கொலை மற்றொருவர் படுகாயம்
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே நடுவக்குறிச்சியைச் சேர்ந்த சிவசூரியன் (34). அவரது அண்ணன் சின்னத்துரை ஆகிய இருவரும் பைக்கில் தட்டார்மடம் காவல் நிலையத்திற்கு கொலை வழக்கில் நிபந்தனை ஜாமின் கையொப்பமிட சென்றுள்ளனர். போலீசார் மாலையில் வந்து கையொப்பம் இட வருமாறு தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு பேரும் தட்டார மடத்திலிருந்து வேப்பங்காடு சாலையில் பைக்கில் சென்றுள்ளனர்.