ஊத்துக்கோட்டை: ஏனம்பாக்கத்தில் கன மழையால் 20 ஏக்கர் நடவு செய்த நெல் நாற்றுகள்
நீரில் மூழ்கி சேதம்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த ஏனம்பாக்கம் கிராமத்தில் இரண்டு நாட்களாக விடாமல் பெய்த கன மழையின் காரணமாக நடவு செய்த மூன்றாம் போகம் நெல் நாற்றுகள் 20 ஏக்கர் அளவில் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன,வங்கியில் கடன் வாங்கியும் நகைகளை அடகு வைத்து ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து நடவு செய்த 20 ஏக்கர் நெல் நாற்றுகள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதம் அடைந்திருப்பதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்,பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை