விளாத்திகுளம்: வார மாட்டுச்சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாடுகள் விற்பனை அமோகம்
விளாத்திகுளம் வேம்பார் ரோட்டில் வார மாட்டு சந்தை நடைபெற்றது. இதில் ஏராளமான மாடுகள் விற்பனைக்கு வந்து இருந்தன, தீபாவளி வருவதை முன்னிட்டு மாட்டு வியாபாரிகள், மாட்டின் உரிமையாளர்கள், மாட்டுவண்டி பந்தைய சாரதிகள் கலந்து கொண்டனர். இதில் ரூ.5 லட்சத்திற்கும் மேல் விற்பனை நடைபெற்றது என வியாபாரிகள் சங்கம் தெரிவித்தனர்.