திண்டுக்கல் மேற்கு: கோட்டூர்ஆவாரம்பட்டியில் வீட்டு பாதை பிரச்சனை காரணமாக பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
திண்டுக்கல், தாடிக்கொம்பு, கோட்டூர்ஆவாரம்பட்டி சேர்ந்த இளஞ்செழியன் மனைவி விஜயா(37) இவர் தனது வீட்டின் முன்பு சுத்தம் செய்து கொண்டிருந்த போதுஅங்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பெரியசாமி மகன் பன்னீர்செல்வம்(44) என்பவர் வீட்டின் பாதை பிரச்சனை காரணமாக விஜயாவை கைகளால் தாக்கி, அசிங்கமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார் இது குறித்து விஜயா அளித்த புகாரின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பன்னீர்செல்வத்தை கைது செய்தனர்.