காரைக்குடி: காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் பார்வையாளர் தினம்-கீழக்கோட்டை மாணவர்கள் பங்கேற்பு
காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் நடந்த பார்வையாளர் தினத்தில், கீழக்கோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். ஆரோக்கியசாமி ஒருங்கிணைப்பில், மாணவர்கள் அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். கார்பன் வடிவங்கள், திரவ நைட்ரஜன், மின்முலாம் பூசுதல், ஹைட்ரஜன் பிரித்தல் உள்ளிட்ட ஆய்வுகளை கண்டு கற்றனர். அழகப்பா பல்கலைக்கழகம், நூலகத்தையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர். கீதா, பாண்டிசெல்வி உள்ளிட்டோர் வழிநடத்தினர்.