ஆத்தூர்: தாண்டிக்குடி அருகே 3000ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிமனிதன் கற்திட்டைகளை ஆய்வு செய்த தொல்லியல் துறையினர்
Attur, Dindigul | Nov 22, 2025 திண்டுக்கல், பண்ணைக்காட்டில் இருந்து தாண்டிக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள எதிரொலி பாறை அருகே அமைந்துள்ள தொல்லியல் துறை கட்டுபாட்டில் சுமார் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த 20-க்கும் மேற்பட்ட கற்திட்டைகள் அமைந்துள்ளது. இந்த நிலையில் தொல்லியல் துறை சார்பில் உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த பகுதிக்கு வந்து இங்குள்ள கற்திட்டைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.