பூந்தமல்லியில் அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது, இந்த பள்ளி வளாகம் தாழ்வாக இருப்பதால் மழைக்காலங்கள் தண்ணீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிப்பதால் மாணவர்கள் ஆசிரியர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர், இரவு பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நின்றதால் ஆசிரியர்கள் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினார்கள் இதனால் அப்பகுதியில் மழை நீர் கால்வாய் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது