திண்டுக்கல் கிழக்கு: அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி கல்வி பயின்று வரும் 52 குழந்தைகளுக்கு வரதராஜ் காம்ப்ளக்ஸில் உள்ள கடையில் புத்தாடையில் எடுத்து வழங்கிய ஆட்சியர்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி கல்வி பயின்று வரும் 52 மாணவிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் புத்தாடைகளை வழங்கினார். உடன் துணை ஆட்சியர் (பயிற்சி) ராஜேஸ்வரி சுவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.