கொடைக்கானல்: மாவட்டத்தில் 16,24,378 கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன கொடைக்கானலில் ஆட்சியர் தகவல்
கொடைக்கானல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீனிவாசபுரம் மற்றும் ஆனந்தகிரி பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், வீடுதோறும் சென்று வழங்கினார். மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களுக்கு 16,24,378 கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது