வேடசந்தூர்: தாடிக்கொம்பில் இளம்பெண் தூக்கு மாட்டி தற்கொலை
தாடிக்கொம்பு முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் வயது 30. இவரது மனைவி பாக்கியலட்சுமி வயது 25. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடன் பிரச்சினை காரணமாக குடும்பத்தினர் கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் யாரும் இல்லாத போது பாக்கியலட்சுமி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து அவரை மீட்டனர். தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் சூரியகலா சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை.