காஞ்சிபுரம்: சங்கர மடம் அருகே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு தமிழக வெற்றி கழகம் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
காஞ்சிபுரம் சங்கர மடம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு, தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பேரணியாக வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி பெரியார் பிறந்த நாளை கொண்டாடினர். கொள்கை தலைவர் பெரியாருக்கு வீரவணக்கம் என முழக்கங்களை எழுப்பி பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.