நிலக்கோட்டை: கொலை வழக்கில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை திருப்பூரில் கைது செய்த வத்தலகுண்டு போலீசார்
வத்தலகுண்டு, காமராஜபுரம் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு நவேந்திரன் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் சேக்முகமது என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. வத்தலகுண்டு ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் திருப்பூரில் பதுங்கி இருந்த சேக்முகமதுவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்