வேடசந்தூர்: அரியபித்தம்பட்டியில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளருக்கு இரும்பு கம்பியால் அடி
வேடசந்தூர் அருகே உள்ள அரிய பித்தம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளராக உள்ளார். இவர் அதே ஊரில் ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவர் குத்தகை நிலத்திற்கு சென்ற பொழுது பாதை இல்லை எனக்கூறி மூன்று பேர் தகராறில் ஈடுபட்டு தன்னை கடுமையாக தாக்கியதால் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது எனக் கூறி வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். தகராறு குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை.