திருச்சி: ஓசோன் தினத்தை முன்னிட்டு மாபெரும் மனிதச்சங்கிலி பேரணி திருச்சி காவிரி பாலத்தில் நடந்தது
திருச்சிராப்பள்ளி சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் பவள விழா ஆண்டின் சிறப்பு நிகழ்வாக உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மாபெரும் மனிதச்சங்கிலி பேரணி இன்று காலை 11 மணிக்கு திருச்சி காவிரிப்பாலத்தில் நடைபெற்றது. உலக ஓசோன் தினத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புவி வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற விதத்தில் இந்த மனித சங்கிலி பேரணி நடந்தது.