திண்டுக்கல் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அவைத்தலைவர் முகமது யூசுப் தலைமை தாங்கினார். இதில் மாநகர் மாவட்ட செயலாளர் மாதவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக மாவட்ட இளைஞரணி செயலாளர் பவுன்ராஜ் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் வருகை தரும் தே.மு.தி.க.கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவை வரவேற்பது சம்பந்தமாக ஆலோசனை நடைபெற்றது.