தேன்கனிகோட்டை: நாகமங்கலம் கிராமத்திற்கு வராத தனியார் பேருந்தை சிறைப்பிடித்த பொதுமக்களால் பரபரப்பு
தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்திற்கு வராத தனியார் பேருந்தை சிறைப்பிடித்த பொதுமக்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள நாகமங்கலம் கிராமத்திற்கு தினசரி வராத தனியார் பேருந்தை ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிறைபிடித்தனர். நாகமங்கலத்தில் இருந்து பெங்களூரு செல்ல வேண்டிய இந்த பேருந்து, திட்டமிட்ட வழித்தடத்தில் செல்லாமல் வேறு பாதையில் செல்வதாக கூறப்படுகிறது.