ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை  சோதனை சாவடியில்   லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் 1.24 லட்சம் கணக்கில் வராத பணம்  பறிமுதல்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை போக்குவரத்து சோதனை சாவடியில் அரசு நிர்ணயித்த வரியை விட வாகனத்திற்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் சென்றது, இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கணேசன்  தலைமையிலான போலீசார்  இன்று காலை சோதனை மேற்கொண்டனர்,இந்த சோதனையில் கணக்கில் வராத 124000 பணத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்,