சோழிங்கநல்லூர்: சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கபடி வீராங்கனை கார்த்திகா பகரேனில் கபடி போட்டியில் வெற்றி பெற்று வந்த அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது
சென்னை கண்ணகி நகர் பகுதியில் இருந்து பக்ரைனில் சமீபத்தில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகாவிற்கு அவர் தாயகம் திரும்பியதை அடுத்து உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்