அகஸ்தீஸ்வரம்: ராஜாக்கமங்கலம் அருகே கொல்லப்பட்ட குழந்தையின் தலையை தேடும் போலீசார்
ராஜாக்கமங்கலம் அருகே குளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலை இல்லாத நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தாயார் ரேகா என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர் விசாரித்த போது அவர் குழந்தையை கொலை செய்து வீசியது தெரிய வந்தது மேலும் அவருக்கு துணையாக இருந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதுடன் குழந்தையின் தலையை போலீசார் இன்று அந்தப் பகுதிக்கு சென்று தேடி உள்ளனர்