பள்ளிப்பட்டு: கர்லம்பாக்கத்தில்  பத்திரப்பதிவு எழுத்தர் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் அமர்ந்து மது அருந்து விட்டு 100 சவரன் நகை கொள்ளை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்த கர்லம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்திர பதிவு எழுத்தாளர் பழனி இவரது மனைவி ரஜினி திருப்பதி உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தனர்,இன்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து 100 சவரன் தங்க நகை இரண்டு கிலோ வெள்ளி பொருள் இரண்டு லட்சம் ரொக்க பணம் பட்டுப்புடவைக்கு கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்