தென்காசி: முன்னாள் குடியரசு தலைவர் வருகை தென்காசி ஆலயத்தில் காவல்துறையினர் ஆய்வு
மூன்று நாள் சுற்றுப்பயணம் ஆக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தென்காசி மாவட்டத்திற்கு 22 ஆம் தேதி திங்கட்கிழமை வருகை தரவுள்ளார் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளார் 23ஆம் தேதி காலை தென்காசி நகரப் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காசி விசுவநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார் இதன் தொடர்ச்சியாக அங்கு காவல்துறையினர் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்