திண்டுக்கல் கிழக்கு: அபிராமி அம்மன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி பாராயணம் பாடி வழிபாடு
திண்டுக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான சுமார் 400 ஆண்டுகள் பழமையான அபிராமி அம்மன் கோவிலில் கந்த சஷ்டி பாராயணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பச்சை கலரில் ஒரே மாதிரியான புடவை அணிந்து வரிசையாக அமர்ந்து 20 நிமிடத்திற்கு மேலாக கந்த சஷ்டி பாராயணம் பாடி இறைவனை வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து முருக பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று தீபாரதனை காட்டப்பட்டது