தூத்துக்குடி மாவட்டம் குருவார்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் 2024-25ம் நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை அறிக்கை கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறபட்டது. இதில் கிராம வள பயிற்றுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.