திண்டுக்கல் மேற்கு: ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோயிலில் கட்டண சீட்டு முறைகேடு புகார்
ரெட்டியார்சத்திரம் அருகே இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோபிநாத சுவாமி திருக்கோவிலில் அர்ச்சனை கட்டணத்திற்கான பிரிண்ட் செய்யப்பட்ட அனுமதி சீட்டில் தேதி, நேரம் குளறுபடி இருப்பதாகவும், ஒரே சீட்டுகள் மீண்டும் புழக்கத்தில் விட்டு முறைகேடுகள் நடப்பதாகவும் புகார் எழுந்தது.இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலைத்துறை உத்தரவிட்டுள்ளது