மாதவரம்: மாதவரம் பேருந்து நிலையத்தில் கஞ்சா கடத்தி வந்த சிறுவன் மற்றும் இளைஞர் கைது
மாதவரம் பேருந்து நிலையத்தில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் படி வடக்கு மண்டல மதுவிலக்கு உதவி ஆணையர் சம்பத் உத்தரவின் பெயரில் உதவி ஆய்வாளர் ராஜேஷ் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சூட்கேஸ் உடன் வந்த சந்தோஷ் என்ற வாலிபரை மற்றும் சிறுவன் ஒருவனையும் சோதனை செய்தபோது 19 கிலோ கஞ்சா கொண்டு வந்தது தெரிய வந்தது இதனை அடுத்து இருவரையும் கைது செய்து சிறுவனை கூர்நோக்கு இல்லத்துக்கும் சந்தோஷை சிறையில் அடைத்தனர் .