நிலக்கோட்டை: வத்தலகுண்டு-ல் பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக மதுபானம், குட்கா புகையிலை விற்பனை செய்த கணவன்,மனைவி கைது
மேலகோவில்பட்டியில் பெட்டிக்கடையில் வைத்து அரசு அனுமதி இன்றி சட்ட விரோதமாக மதுபானம் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கணவன் காட்டுராஜா(42) மனைவி மகேஸ்வரி(39) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 17 மதுபான பாட்டில்கள், 129 பாக்கெட்கள் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.