குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகில் தோட்டத்திற்குள் புகுந்து 2 வெள்ளை பன்றிகளை திருடி சென்ற மர்ம நபர்கள்
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா குடப்பம் ஊராட்சி ஆவலகோனூர் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர் செட் அமைத்து வெள்ளை பன்றிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் இரண்டு வெள்ளை பன்றிகளை தூக்கிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு 44 ஆயிரம் ரூபாய். இது குறித்து தங்கவேல் காணாமல் போன பன்றிகளை கண்டுபிடித்து தருமாறு கூம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.