தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றவுடன், தமிழ்நாட்டின் வனப்பகுதி 23 சதவீதமாக இருந்ததை ”பசுமை தமிழக இயக்கம்” என்ற திட்டத்தின் மூலம் 33 சதவீதமாக உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட செங்கட்டான் குளத்தில் நடைபெற்ற ”சங்க இயல் வனம்” துவக்க விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.