திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சீலப்பாடி ஊராட்சி S பெருமாள் கோவில்பட்டி, எ ஓடைப்பட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் கால்நடைகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர் இப்பகுதிக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கு நீர் ஆதாரமாகவும்,பொது மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் ஊரையொட்டி செல்லமந்தாடி பெரியகுளம் உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் தொற்று நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.