குன்றத்தூர்: ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காரில் வந்து செல்போன் பறித்த இருவர் கைது ஒரகடம் போலீசார் நடவடிக்கை
பீகார் மாநிலத்தை சேர்ந்த சன்னி குமார் மதுரா புதுக்கோட்டை கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி ஒரகடத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு அப்பகுதியில் நடந்து சென்ற போது அவருக்கு பின்னால் காரில் வந்த இருவர் சன்னி குமாரை மடக்கி செல்போனை பிடுங்கி சென்றுள்ளனர். இது தொடர்பாக ராஜ் கோகுல், ஜெய் என இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.