ஆத்தூர் வட்டம், போடிக்காமன்வாடி கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற “சமத்துவப் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் முன்னிலையில் தொடங்கி வைத்து பங்கேற்றார் தொடர்ந்து, நாட்டுப்புறக் கலைஞர்கள், தூய்மைப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கௌரவித்து பரிசுப் பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்