கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் தமிழ்நாடு பனையேறி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு, இன்று (செப். 22) தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள் இறக்கியதாகப் பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது