திருநெல்வேலி: முருகன் குறிச்சி நேருஜி கலையரங்கில் அன்பு கரங்கள் திட்டத்தினை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த தமிழக முதல்வர்.
தமிழகம் முழுவதும் என்று அன்பு கரங்கள் திட்டத்தினை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் இதனைத் தொடர்ந்து முருகன் குறிச்சி நேருஜி கலையரங்கம் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் எம்எல்ஏ அப்துல் வஹாப், மேயர் ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை 11:45 மணி அளவில் அன்பு கரங்கள் திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.