விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட படர்ந்தபுளி கிராமத்தில் துவக்கப்பள்ளி உள்ளது. இந்த துவக்கப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் நடப்பதற்காக 4.90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சுற்றுச்சுவர் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் முறையாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் நடைபெறவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கலைந்து செல்ல அறிவுறுத்தினார்