திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி மற்றும் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.