திருப்பத்தூர்: சிராவயலில் ஓடாத டிராக்டரை ஓடியதாக அதிகாரிகள் சொல்வதாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் வேதனை
திருப்பத்தூர் அருகே சிராவயலில் உள்ள கூட்டுறவு வங்கியில் மதிப்பீட்டுக் குழுத் தலைவர் எஸ்.காந்திராஜன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. பயிர்க்கடன், நகைக்கடன் குறித்து விசாரித்த குழு, வங்கிகளில் திருட்டு அதிகரிப்பதாகவும், பாதுகாப்பு முக்கியம் எனவும் குறிப்பிட்டது. சிசிடிவி செயல்பாடு, பெட்டகப் பதிவு அவசியம் என எச்சரித்தார். ஓடாத டிராக்டரை ஓடியதாக அதிகாரிகள் கூறியதை கண்டித்து, அறிவுரை வழங்கினார்.