நாகப்பட்டினம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சிப்பதாக கூறி திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலைத்திட்டத்தை முடக்க முயற்சிப்பதாக மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையில் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழகத் தலைவர் கவுதமன் தலைமை தாங்கினார். செல்வராஜ் எம்பி, திமுக விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை சிதைத்து, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க முயற்சிப்பதாக மத்