தென்காசி: தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்து நகையை பறித்து சென்ற நபருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் ரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததோடு கம்மல் மற்றும் தாலிச் சங்கிலி பறித்துச் சென்ற நபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது