திண்டுக்கல் கிழக்கு: அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மணிக்கூண்டில் கண்டன ஆர்ப்பாட்டம் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள தொழிலாளர்களுக்கு விரோதமான 4 சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசு தனது தொழிலாளர்கள் விரோத போக்கை கைவிட வேண்டும். தனியார் மையமாக்குவதை கை விட வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே மணிக்கூண்டு பகுதியில் CITU, AITUC, LPF, MLF, HMS, INTUC தொழில் சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.