நத்தம்: சாலையை கடக்க முயன்றவர் மீது இருசக்கர வாகனத்தில் மோதிய நபர்கள் சாலை ஓரம் தூக்கி வீசி சென்ற சிசிடிவி காட்சி நத்தம் அருகே மனிதாபிமானமற்ற செயல்
நத்தம் அருகே குட்டுப்பட்டியை சேர்ந்த பழனி. இவர் நத்தம் துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனது உறவினர் வீட்டிற்கு சென்று மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்ற போது துவரங்குறிச்சியை நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பழனி மீது மோதியதில் பழனி படுகாயம் அடைந்துள்ளார் அவரை இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சாலையோரம் தூக்கி வீசிய நிலையில் அப்பகுதியில் ஒருவர் வருவதைப் பார்த்து அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த விபத்தில் பழனி சம்பவ இடத்திலேயே பலியானார்