விளாத்திகுளம்: தெற்கு குளத்தூர் அருகே அருகே பழைய காலத்து செயற்கை குளம் கண்டுபிடிப்பு
தெற்கு குளத்தூர் அருகே உள்ள பனையூர் என்ற குக்கிராமத்தில், சுமார் 4 கிலோமீட்டர் விட்டம் கொண்ட பிரம்மாண்டமான செயற்கைக் குளம் இருந்ததற்கான அடையாளங்களும், கடற்கரையில் இருந்து 4 கி.மீ. தொலைவில் கடல்சார் புதைபடிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.