திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் கடலில் மூழ்கி கோயம்புத்தூர் பகுதியைச் சார்ந்த நபர் பலி
கோவை மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த மணிகண்டன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. மணிகண்டன் தனது நண்பர் மதிவாணனுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். கோவில் கடலில் புனித நீராடிய போது, கடல் அலையில் சிக்கி மூழ்கினார். போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.