வாலாஜாபாத் தாலுக்கா நத்தாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அலங்காரம் வயது 80, இவருக்கு ஒரு மகனும் நான்கு மகள்களும் உள்ள நிலையில் அனைவரும் தனித்தனியாக வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். அலங்காரம் தனது வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று இரவு மகன் மற்றும் மகள் உணவளித்துவிட்டு தாயுடன் பேசி விட்டு சென்று உள்ளனர். இந்த நிலையில் காலையில் நீண்ட நேரம் ஆகிய அலங்காரம் வெளியே வராத காரணத்தினால் அக்கம் பக்கத்தினர் வீட்டில் சென்று பார்த்து உள்ளனர்.