சிங்கம்புனரி: சிங்கம்புணரி பேரூராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கும் பணிகள் திவிரம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சியில் 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கொசுக்கடியால் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவியதால், பொதுமக்கள் கோரிக்கையின்பேரில், பேரூராட்சி நிர்வாகம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக வார்டுகள் 13, 14 கீழக்காட்டு ரோடு பகுதிகளில் கொசு மருந்து தெளித்து சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்தியது. இதனால் நோய்ப்பரவல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.