விளாத்திகுளம்: மேட்டுப்பட்டி பகுதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தை சட்டமன்ற உறுப்பினர் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் நத்தம் வேளிடுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் ஆனது மேட்டுப்பட்டி வழியாக ஆற்றில் கலக்கிறது. அங்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்தப் பாலத்தை விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயன் நேரில் ஆய்வு மேற்கொண்டு பருவ மழைக்காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாலத்தின் அடியில் உள்ள மரங்களை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.