திண்டுக்கல், ரவுண்ட் ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி சென்றது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து காரைக்குடியை சேர்ந்த மாரியப்பன் மகன் நாகார்ஜூன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்