வேடசந்தூர்: லட்சுமணன்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த முதியவர் உயிரிழப்பு
அகரம் பேரூராட்சி கொண்ட சமுத்திரம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 62). இவர் வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது மொபெட்டுக்கு பெட்ரோல் போட்டு விட்டு வேடசந்தூர் நோக்கி செல்லும் பொழுது புதியதாக சர்வீஸ் சாலை அமைக்கும் பகுதியில் நிலை தடுமாறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். வேடசந்தூர் சப் இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்கு பதிந்து விசாரணை.