தூத்துக்குடி: அழகேசபுரத்தில் அறுந்து தொங்கும் மின் வயர் சீரமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை
தூத்துக்குடி அழகேசபுரத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தில் உள்ள மின் வயர்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதாக பொதுமக்கள் ஏற்கனவே குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் நேற்றிலிருந்து பெய்த மழையின் காரணமாக மின் வயர் ஒன்று அறுந்து சாலையை தொடும் வரை தொங்கி கொண்டிருக்கிறது. இது சம்பந்தமாக புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.